ரஜினி - லதா : நட்சத்திரத் தம்பதிகளின் இலக்கணம்!

ரஜினி - லதா : நட்சத்திரத் தம்பதிகளின் இலக்கணம்!

செய்திகள் 26-Feb-2015 10:17 AM IST Chandru கருத்துக்கள்

தொடரும் திருமண பந்தம் என்பது ஒரு மிகப்பெரிய சாதனையாகவே மாறிவிட்ட ஒரு எந்திரமய சூழ்நிலையில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது இன்றைய சமூகம். அதில் அக்னி சாட்சியாக தான் கைபிடித்த கரத்தை கடைசிவரை விட்டுவிடாமல் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சில தம்பதிகளே, புதிதாய் இணையப்போகும் தம்பதிகளுக்கு நம்பிக்கை தரும் எடுத்துக்காட்டாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் அதுவே நட்சத்திரத் தம்பிகளாய் இருந்துவிட்டால் இந்த சமூகத்துக்கே ஒரு இலக்கணமாகவும் மாறிவிடும். அப்படி ஒரு தம்பதிதான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - லதா தம்பதி.

1975ஆம் ஆண்டு திரையுலகில் கால்பதித்த ரஜினி, 1981ஆம் ஆண்டு திருப்பதி வெங்கடாசலபதியின் முன் லதாவை கரம் பிடித்தார். அதன் பிறகு ரஜினியின் ஏற்றத்தாழ்வுகளில் தோள் கொடுக்கும் தோழியாய், அன்பு காட்டும் தாயாய், இல்லறம் காக்கும் இல்லத்தரசியாய் ரஜினியை அவரின் பின்னாலிருந்து வழிநடத்தியவர் லதாதான். இவர்களின் சந்தோஷ வாழ்க்கைக்கு சாட்சியாய் ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரண்டு தேவதைகளையும் பெற்றெடுத்தது இந்த தம்பதி. நடிகர் தனுஷை ஐஸ்வர்யாவும், தொழிலதிபர் அஸ்வினை சௌந்தர்யாவும் மணந்து, சந்தோஷமாய் குடும்பம் நடத்தி பெற்றோர்களின் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எப்போதும் கேமரா கண்கள் சூழ வலம் வரும் சினிமா நட்சத்திரங்களின் திருமண வாழ்க்கையை ஒட்டுமொத்த சமூகமும் எப்போதும் உற்றுநோக்கிக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு சூழலிலும் ரஜினி, லதா தம்பதி 33 வருடங்களை சிறப்பாக கடந்து, இன்று 34வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு உதாரணமாய் வாழும் ரஜினி - லதா தம்பியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் வாழ்துக்கள் பல!

Key News :
Wedding anniversary wishes to Rajini and Latha. The couple are celebrating their 34th wedding anniversary today. Rajinikanth and Latha’s wedding happened at the Tirupati Lord Venkateswara Temple in a very simple manner in 1981. The coupe have two daughters, Aishwarya and Soundarya, both of whom are into the film industry as well.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;