காஜல் வீட்டுக்கதவை மீண்டும் தட்டிய பாலிவுட் வாய்ப்பு!

காஜல் வீட்டுக்கதவை மீண்டும் தட்டிய பாலிவுட் வாய்ப்பு!

செய்திகள் 26-Feb-2015 9:19 AM IST Chandru கருத்துக்கள்

என்னதான் தெற்கில் கொடிகட்டிப் பறந்தாலும், வடக்கில் ஜொலிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான நடிகைகளின் கனவாக இருக்கிறது. அதனால்தான் ஒரு சிறிய படமென்றாலும்கூட அது பாலிவுட் படமாக இருந்தால், மற்ற வாய்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஓடோடிச் சென்று அதில் கையெழுத்திடுவார்கள். இதுவரை தென்னிந்திய சினிமாவிலிருந்து பலர் பாலிவுட்டிற்குச் சென்றிருந்தாலும் அதில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நம்மூர் ஆட்கள் அங்கே ஜொலித்திருக்கிறார்கள்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர். ஆனால், அவர் முதன்முதலில் அறிமுகமானது ஹிந்தியில்தான். ஆனால், அதன்பிறகு அங்கே அவருக்கு வாய்ப்புக் கிடைக்காததால் தெலுங்கிற்கு வந்தார். பின்னர் தமிழ்த்திரையுலகிலும் புகுந்தார். இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகர்களின் ஃபேவரைட் நாயகி காஜல்தான்.

இதற்கிடையில் ‘சிங்கம்’, ‘ஸ்பெஷல் 26’ என இரண்டு ஹிந்தி படங்களில் நாயகியாக நடித்துவிட்டார் காஜல். இரண்டுமே சூப்பர்ஹிட் படமாக இருந்தாலும் அதன்பிறகும் பெரிய வாய்ப்புகள் எதுவும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இந்நிலையில், ரன்தீப் ஹூடாவுக்கு ஜோடியாக ‘டு லஃப்ஸோன் கி கஹானி’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு காஜலுக்கு வந்திருக்கிறது. மலேசியாவில் நடப்பதுபோல் உருவாக்கப்படவிருக்கும் இந்த காதல் படத்தை தீபக் திஜோரி இயக்குகிறார். இதற்கு முன்பு கஜால் நடித்த இரண்டு ஹிந்திப் படங்களுமே, ஆக்ஷன் படங்களாக இருந்ததால், அதில் காஜலின் கேரக்டர் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் இந்த ‘தோ லஃப்ஸோன் கி கஹானி’ படம் முழுக்க முழுக்க லவ் ஸ்டோரி என்பதால் காஜலுக்கு படம் முழுக்க வரும் சூப்பர் கேரக்டராம். இதனால் சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருக்கிறார் அம்மணி!

Key News :

Randeep Hooda and Kollywood actress Kajal Aggarwal are coming together for a bollywood film, Do Lafzon Ki Kahani, directed by Deepak Tijori. This is 3rd Bollywood film (lead role) for Kajal after Singham and Special 26.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;