‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பு?

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் தலைப்பு?

செய்திகள் 25-Feb-2015 5:32 PM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படம் ஓடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் அஜித்தின் அடுத்த படத்தின் தகவல்கள் குறித்தும் ‘தல’ ரசிகர்கள் ஆவலாக எதிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தொடர்ந்து இப்படத்தையும் ஏ.எம்.ரத்னமே தயாரிக்கிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பார் என எதிபார்க்கப்படுகிறது. அனிருத் அல்லது ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்ற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சந்தானம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

சமீபத்திய அஜித் படங்களைப் பொறுத்தவரை படப்பிடிப்பு வேலைகள் முடியும் வேளையில்தான் அப்படத்திற்கான டைட்டில் என்ன என்பதையே அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள். ஆனால், அதற்கு முன்பே பல்வேறு தலைப்புகள் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருக்கும். அப்படி தற்போது இப்படத்திற்கு வைத்திருப்பதாக கூறப்படும் டைட்டில் ‘அச்சமில்லை’. இதனை அஜித்தின் விக்கி பக்கத்திலும் ரசிகர்கள் பதிவேற்றியிருக்கிறார்கள். இது அதிகாரபூர்வ தலைப்பா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ‘வீரம்’ என்பதும் ‘அச்சமில்லை’ என்பதும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தை குறிக்கும் தலைப்பு என்பதும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம்.

1984ஆம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்து தேசிய விருது வாங்கிய படத்தின் பெயர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;