‘புலி’யில் விஜய் 3 வேடமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு

‘புலி’யில் விஜய் 3 வேடமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு

செய்திகள் 25-Feb-2015 1:40 PM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தை ஷிபு தமீனும், விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் ஆகியோர் இணைந்து ‘எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தயாரித்து வருகின்றனர். ஃபேன்டஸி படமாக உருவாகி வரும் ‘புலி’யில் இரண்டு யுகத்தில் கதை நடக்கிறது என்றும், அதில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்றும் செய்திகள் ஒரு சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் மட்டுமே நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், ஒரு சில வாரங்களாக 3 வேடங்களில் அவர் இப்படத்தில் நடிப்பதாகவும், அவர்களுக்கு ஜோடியாக ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், இதனை எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்த ட்வீட் செய்துள்ள அந்நிறுவனம், ‘‘புலியில் விஜய் சார் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி’’ என்று குறிப்பிட்டுள்ளது. 3 வேடங்களில் விஜய் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ள எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம், விஜய்க்கு ஒரேயொரு வேடமா? அல்லது இரட்டை வேடங்களா என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;