பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்!

பிரபல ஒளிப்பதிவாளர் மரணம்!

செய்திகள் 25-Feb-2015 1:37 PM IST VRC கருத்துக்கள்

‘காதலிக்க நேரமில்லை’, ‘கல்யாணப் பரிசு’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆகிய தமிழ் படங்கள் உட்பட, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஏ.வின்சென்ட் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். தமிழில் ‘திருமாங்கல்யம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இவரது மகன்கள் ஜெயனன் வின்சென்ட், அஜெயன் வின்சென்ட் ஆகியோரும் சினிமாவில் ஒளிப்பதிவாளர்களாக இருக்கிறார்கள்! இவருக்கு ஸ்நேகலதா, சுமித்ரா என இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்! கலை இயக்குனர் சாபு சிரில் இவரது மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் பிறந்து வளர்ந்த வின்சென்ட் சென்னையில் செட்டிலானவர். சென்னை ஹாரிங்டன் ரோட்டிலுள்ள தனது வசதியில் வசித்து வந்த வின்சென்ட் கடந்த இரண்டு வார காலமாக உடல் நலம் சரியில்லாமல் அதற்கு சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;