சிவகார்த்திகேயன் நாயகியை ஜோடியாக்கிய ஜீவா!

சிவகார்த்திகேயன் நாயகியை ஜோடியாக்கிய ஜீவா!

செய்திகள் 25-Feb-2015 12:45 PM IST VRC கருத்துக்கள்

ஜீவா அடுத்து நடிக்கும் படத்தை ராம்நாத் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் நயன்தாராவை அணுகியிருக்கிறார்கள்! ஆனால் நயன்தாரா இப்போது நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருவதால், அவரிடம் ஜீவா படத்திற்கு போதுமான கால்ஷீட்ஸ் இல்லையாம்! இதனை தொடர்ந்து இப்போது ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ரீதிவ்யா கமிட் ஆகியிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் 15-ஆம் தேதி துவங்கும் என்றும், படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படம் சிட்டி, வில்லேஜ் பின்னணியில் உருவாகும் படமாம்! ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘யான்’ ஆகிய படங்கள் சொல்லும்படியான வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;