சிவகார்த்திகேயனின் ‘ஹாட்ரிக்’ சென்டிமென்ட்!

சிவகார்த்திகேயனின் ‘ஹாட்ரிக்’ சென்டிமென்ட்!

செய்திகள் 25-Feb-2015 12:02 PM IST Chandru கருத்துக்கள்

நாளை மறுநாள் உலகமெங்கும் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ திரைப்படம். வெறும் காமெடி ஹீரோவாக தனது அறிமுகப் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன், கடைசியாக வெளிவந்த ‘மான் கராத்தே’ படத்தில் காமெடியோடு கொஞ்சம் ஆக்ஷனையும் கலந்து பரிசோதனையில் இறங்கினார். பாக்ஸர் ‘பீட்டர்’ கேரக்டருக்கு அவரே எதிர்பார்க்காத வண்ணம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்க, அந்த உற்சாகத்தில் தற்போது ‘காக்கி சட்டை’ மதிமாறனாக முழுநீள ஆக்ஷன் ஹீரோவாகி இருக்கிறார் சிவா.

சென்சாரில் கிளீன் ‘யு’ சர்டிஃபிகேட் வாங்கியுள்ள ‘காக்கி சட்டை’ படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. மொத்தம் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடுகிறதாம் இப்படம். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான ‘மான் கராத்தே’ 2 மணி நேரம் 37 நிமிடங்களும், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2 மணி நேரம் 31 நிமிடங்களும் ஓடக்கூடியதாக இருந்தது. மேற்கண்ட இந்த இரண்டு படங்களைப் போன்ற ‘காக்கி சட்டை’யின் ரன்னிங் டைமும் இருப்பதால், அந்த 2 படங்களைப்போல இப்படமும் சூப்பர்ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ‘காக்கி சட்டை’ டீம்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;