கொண்டாட்டத்தில் கௌதம் மேனன், பிரேம்ஜி அமரன்!

கொண்டாட்டத்தில் கௌதம் மேனன், பிரேம்ஜி அமரன்!

செய்திகள் 25-Feb-2015 10:52 AM IST Chandru கருத்துக்கள்

சம்பந்தமேயில்லாத இரண்டு பிரபலங்களுக்கிடையே அதிசயமாக ஒருசில ஒற்றுமைகள் இருக்கும். அப்படி வேறு வேறு தளத்திலிருக்கும் இயக்குனர் கௌதம் மேனனும், நடிகர் பிரேம்ஜியும் இன்று (பிப்ரவரி 25) தங்களின் பிறந்நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் பிறந்தநாள் என்ற ஒற்றுமையோடு இருவருக்கும் பொதுவாக இருக்கும் இன்னொரு விஷயம் ‘தல’ அஜித்.

ஆம்... சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் மீண்டும் உற்சாகத்திற்குத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். அதோடு அவரை நாயகனாக வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கவும் ஆர்வமாக இருக்கிறார். இந்த ஒரே படத்தின் மூலம் அஜித்திற்கும், கௌதமிற்கும் இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டிருப்பது அவருடைய சமீபத்திய பேட்டிகளின் மூலமே நாம் தெரிந்து கொள்ளலாம்.

இன்னொருபுறம்... நடிகர் பிரேம்ஜி அமரன் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது நாடறிந்த விஷயம். அதை எங்கேயும், எப்போதும் மறைத்ததில்லை அவர். தொடர்ந்து பிரேம்ஜி ட்வீட்களும், ஸ்டேட்டஸ்களும் அஜித் ரசிகர்களை உற்சாகமூட்டுவதாகவே இருக்கும். அஜித் ரசிகர்களின் பட்டாளமே பிரேம்ஜியைத் தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதும் இதற்கு சாட்சி. அவ்வப்போது அவரை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் வம்புக்கிழுப்பதும் வாடிக்கைதான்.

தங்கள் வாழ்க்கையில் புதிய ஆண்டு ஒன்றில் அடியெடுத்து வைக்கும் இயக்குனர் கௌதம் மேனனுக்கும், பிரேம்ஜி அமரனுக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;