‘வி.மியூசிக்’கிடம் கள்ளப்படம்!

‘வி.மியூசிக்’கிடம் கள்ளப்படம்!

செய்திகள் 25-Feb-2015 10:48 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஷால் தனது ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருவதோடு, தனது ‘வி.மியூசிக்’ நிறுவனம் மூலம் தனது ‘பூஜை’, ‘ஆம்பள’ ஆகிய படங்களின் பாடல்களையும் வெளியிட்டார். தனது சொந்த தயாரிப்பில் வெளியான படங்களின் பாடல்களை வெளியிட்டு வந்த விஷால் இப்போது வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களின் பாடல்களையும் வெளியிட துவங்கியுள்ளார். அதன் படி விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளார் விஷால். இன்று காலை ஒரு பிரபல எஃப்.எம்.மில் ‘கள்ளப்படம்’ படத்தின் பாடலகள் வெளியாகிறது. இயக்குனர் மிஷ்கின் உதவியாளர் ஜெ.வடிவேல் இயக்கியிருக்கும் ’கள்ளப்படம்’ படத்திற்கு கே. இசை அமைத்துள்ளார். தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் விஷால் இப்படத்தின் ஆடியோவை வாங்கியிருப்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விக்ரம் வேதா - டீசர்


;