கைவிட்ட படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கும் விஜய்சேதுபதி!

கைவிட்ட படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கும் விஜய்சேதுபதி!

செய்திகள் 25-Feb-2015 10:35 AM IST Chandru கருத்துக்கள்

‘ஸ்டுடியோ 9’ நிறுவன தயாரிப்பில் விஜய்சேதுபதி, வரலட்சுமி சரத்குமார் நடிக்கவிருந்த ‘வசந்தகுமாரன்’ படம் கைவிடப்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார் நடிகர் விஜய்சேதுபதி. தயாரிப்பு நிறுவனத்திற்கும், தனக்கும் இடையே இருந்த சில கருத்த வேறுபாடுகள் காரணமாகவே இந்த முடிவை, தான் எடுத்ததாக அப்போது தெரிவித்தார் விஜய் சேதுபதி. அதே நேரம் ‘ஸ்டியோ 9’ சுரேஷும், விஜய் சேதுபதியால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், இதனால் கம்பெனியை முடக்கும் எண்ணத்தில் தான் இருப்பதாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். பின்னர் இந்த செய்தியின் பரபரப்பு அப்படியே காணாமல் போய்விட்டது.

தற்போது கதையிலும், விஜய்சேதுபதியின் கேரக்டரிலும் சிறு சிறு மாற்றங்கள் செய்து மீண்டும் ‘வசந்தகுமாரன்’ படத்தைத் துவங்கலாம் என விஜய்சேதுபதியும், தயாரிப்பாளரும் முடிவு செய்திருப்பதாகவும், மார்ச் அல்லது ஏப்ரலில் படப்பிடிப்பைத் துவங்கவிருப்பதாகவும் செய்திகள் கிடைத்திருக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;