அரசியல்வாதி ஆகிறார் சுந்தர்.சி.!

அரசியல்வாதி ஆகிறார் சுந்தர்.சி.!

செய்திகள் 25-Feb-2015 10:27 AM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் பிஜுமேனன், நிக்கி கல்ரானி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘வெள்ளிமூங்கா’. இப்படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. மலையாளத்தில் பிஜு மேனன் நடித்த கேரக்டரில் தமிழில் சுந்தர்.சி.நடிக்கிறார். ‘வெள்ளிமூங்கா’ படத்தை பார்த்த சுந்தர்.சி.க்கு படம் மிகவும் பிடித்து விட்டதாம். அதனால் இதில் அவரே நடிக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இப்படத்தை இயக்கப் போவது வேறு ஒரு இயக்குனராம். திருமணம் ஆகாத 41 வயது அரசியல் வாதி ஒருவர் தனக்கும் கிடைக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த, அதனால் ஏற்படும் விபரீதங்களை சுவாரஸ்யமாக சித்தரிக்கும் படம் இது. இதில் அந்த 41 வயதுடைய அரசியல்வாதி கேரக்டரில் சுந்தர்.சி.நடிக்க, மற்ற நடிகர், நடிகைகள், மற்றும் படத்தை இயக்குவது யார் என்பது போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;