அஜித் பிறந்தநாளில் துவங்கும் விஷாலின் அடுத்த படம்!

அஜித் பிறந்தநாளில் துவங்கும் விஷாலின் அடுத்த படம்!

செய்திகள் 25-Feb-2015 10:14 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆம்பள’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஷால். இப்படத்தின் மூலம் முதன்முறையாக விஷாலுக்கு ஜோடியாகியிருக்கிறார் காஜல் அகர்வால். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் மார்ச் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து லிங்குசாமியின் இயக்கத்தில் ‘சண்டக்கோழி’ படத்தின் 2ம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார் விஷால்.

தற்போது இந்த 2ம் பாகத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியும், நட்சத்திரங்கள் தேர்வு, டெக்னீஷியன்களுக்கான பரிசீலனை போன்றவையும் துரிதகதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுசீந்திரன் படத்தை வேகவேகமாக முடித்துவிட்டு ‘சண்டக்கோழி 2’வின் படப்பிடிப்பை அஜித் பிறந்தநாளான மே 1ஆம் தேதி முதல் துவங்கலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம் விஷாலும், லிங்குசாமியும். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தீபாவளி வெளியீடாக கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;