பிரபுவிடம் பயிற்சி எடுக்கிறாரா விஜய்?

பிரபுவிடம் பயிற்சி எடுக்கிறாரா விஜய்?

செய்திகள் 25-Feb-2015 9:57 AM IST Chandru கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்திற்காக விரைவில் கேரளாவில் உள்ள வாகமண் மலைப்பிரதேசத்தில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இரண்டு காலகட்டங்களில் நடைபெறும் இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. அதில் மன்னர் யுகத்தில் நடக்கும் காலகட்டத்தில் விஜய்க்கு தளபதி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அந்த ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவியும், இளவரசியாக ஹன்சிகா மோத்வானியும் நடிக்கிறார்கள்.

விஜய்யின் தளபதி கேரக்டருக்கு பலவிதமான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் ராஜகுரு வேடத்தில் நடிகர் பிரபு இப்படத்தில் நடிப்பதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது. விரைவில் இவர்கள் இருவரும் பங்குகொள்ளும் ஷூட்டிங் நடைபெறவிருக்கிறதாம். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். அதோடு ‘நான் ஈ’ சுதீப் முக்கிய வேடமொன்றில் நடிக்கும் இப்படத்தில் காமெடி நடிகர்கள் பலரும் நடிப்பதாகவும் தெரிகிறது.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ‘புலி’ படத்தை ஜூலையில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;