வாகமண் மலைப்பிரதேசத்திற்குச் செல்லும் ‘புலி’!

வாகமண் மலைப்பிரதேசத்திற்குச் செல்லும் ‘புலி’!

செய்திகள் 24-Feb-2015 2:20 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இங்கு நடந்து வந்த படப்பிடிப்பு ஓரிரு நாட்களுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து ‘புலி’யின் படப்பிடிப்பிற்காக இப்படக் குழுவினர் கேரளாவிலுள்ள மலை பிரதேசமான வாகமண் என்ற இடத்திற்கு செல்லவிருக்கின்றனர். அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் படத்தின் ஷூட்டிங் நடக்கவிருக்கிறது.

சிம்புதேவன் இயக்கி வரும் ‘புலி’ படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, ‘நான் ஈ’ சுதீப் முதலானோர் நடித்து வர, இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்தை பிரம்மாண்டமான ,முறையில் பி.டிசெல்வகுமார், தமீன் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்!

Key News
Puli's next schedule will be happening at a Kerala hill station named Vagamon. This schedule will all the lead cast featuring Vijay, Shruti Hassan, Hansika, Sri Devi and Sudeep.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலி - அதிகாரபூர்வ டீஸர்


;