விஜய், அஜித்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் அனிருத்!

விஜய், அஜித்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் அனிருத்!

செய்திகள் 24-Feb-2015 1:48 PM IST Chandru கருத்துக்கள்

சிங்கம், சிங்கம் 2 படங்களின் சூப்பர்ஹிட் வெற்றியைத் தொடர்ந்து ‘சிங்கம்’ படத்தின் 3ம் பாகம் உருவாகும் என சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளிவந்தன. தற்போது அந்த செய்தி அதிகாரபூர்வமாக உறுதியாகி உள்ளது. இப்படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் முதல்முறையாக சூர்யாவுடன் இணைகிறார் இசையமைப்பாளர் அனிருத். விஜய்யுடன் ‘கத்தி’ படத்திலும், ‘வீரம்’ சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தையும் தொடர்ந்து தற்போது சூர்யாவுடன் ‘சிங்கம் 3’யில் அனிருத் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் ‘24’ படத்திற்குப் பிறகு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

Key News
Anirudh has been signed for Surya's Singam 3.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;