இந்த வாரம் 6 படங்கள்!

இந்த வாரம் 6 படங்கள்!

செய்திகள் 24-Feb-2015 1:16 PM IST VRC கருத்துக்கள்

இந்த வாரம் வெள்ளிக் கிழமை (27-ஆம் தேதி) பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’ படம் ரிலீசாவதோடு அந்த படத்துடன் மேலும் 5 படங்கள் ரிலீசாகவிருக்கிறது. இதில் ‘காக்கி சட்டை’ படம் மட்டும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. மீதியுள்ள தியேட்டர்களில் மற்ற 5 படங்கள் ரிலீசாகவிருக்கிறது. அதில் ஒரு படம் கே.எஸ்.தங்கசாமி இயக்கியுள்ள ‘எட்டுத்திக்கும் மதயானை’. இப்படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ளார். இன்னொரு படம் பாலா ஸ்ரீராம் இயக்கியுள்ள ‘இரவும் பகலும் வரும்’. இந்தப் படங்கள் தவிர ‘ஒருதலை ராகம்’ சங்கர் இயக்கி, நடித்துள்ள ‘மணல் நகரம்’, சாய்ராம் இயக்கியுள்ள ‘சொன்னாப் போச்சு’, எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள ‘வஜ்ரம்’ ஆகிய படங்களும் ரிலீசாகிறது. இந்த வாரம் ரிலீசாகும் இந்த 6 படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறும் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்!

Key News
6 movies are releasing this friday (Feb 27th). 1- Kakki Sattai, 2- Ettuthikkum Madhayanai, 3- Iravum Pagalum Varum, 4- Manal Nagaram, 5- Sonna Poachu, 6- Vajram.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;