‘உத்தம வில்லன்’ விழாவில் பூஜாகுமார், ஆன்ட்ரியா நடனம்!

‘உத்தம வில்லன்’ விழாவில் பூஜாகுமார், ஆன்ட்ரியா நடனம்!

செய்திகள் 24-Feb-2015 12:05 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படம் ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீசாகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வருகிற மார்ச் 1-ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் நடக்கவிருக்கும் ‘உத்தம வில்லன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆட்டக்களரி எனும் நடனங்கள் நடைபெறவிருக்கிறது. பெங்களூரை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துள்ள பூஜா குமார், ஆன்ட்ரியா முதலானோரும் நடனம் ஆட இருக்கிறார்கள்! தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகை பெங்களூரில் நடந்து வருகிறது. இந்த நடன ஒத்திகையில் பங்கேற்க பூஜா குமார் பெங்களூர் சென்றுள்ளார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுடன், பூஜா குமார், ஆன்ட்ரியா, ஊர்வசி, ஜெயராம், நாசர், இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் முதலானோர் நடித்திருக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

Key News
Uthama Villian audio launch is all set to happen in a grand manner in Chennai trade center Nandambakkam on March 1st. The movie's heroines Andrea and Pooja Kumar will be performing a special dance on this event.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;