விஷால் - மிஷ்கின் ஆந்திராவில் பலப்பரீட்சை!

விஷால் - மிஷ்கின் ஆந்திராவில் பலப்பரீட்சை!

செய்திகள் 24-Feb-2015 11:27 AM IST Chandru கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கத்தில் உருவான பேய்ப்படமான ‘பிசாசு’ கடந்த வருடம் டிசம்பர் 20ம் தேதி தமிழில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இந்த ஹாரர் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதோடு படத்திற்கு எதிர்பார்த்ததையும் விட நல்ல வசூலும் கிடைக்க, இப்படத்தின் மற்ற மொழி உரிமைகளை வாங்க ஆர்வமாக பலரும் முன்வந்தனர். தெலுங்கில் இப்படம் ‘பிசாச்சி’ என்ற பெயரில் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதேநாளில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’யின் தெலுங்கு டப்பிங் திரைப்படமும் வெளியாகவிருக்கிறது. தமிழில் பொங்கலுக்கு வெளியான இப்படம் தெலுங்கில் ‘மகாமஹாராஜு‘ என்ற பெயரில் வெளியாகிறது. விஷாலின் முந்தைய படமான ‘பூஜை’யின் தெலுங்கு டப்பிங்கிற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்ததால் ‘ஆம்பள’ படத்திற்கும் அதே அளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் விஷால்.

Key News
Myskin's Pisasu telugu remake named Pisachi and Vishal's Ambala remake named MagamahaRaju is releasing on Feb 27th in AP.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;