தேவா பாடிய பாடலுக்கு நடனம் ஆடிய ராஜுசுந்தரம்!

தேவா பாடிய பாடலுக்கு நடனம் ஆடிய ராஜுசுந்தரம்!

செய்திகள் 24-Feb-2015 11:27 AM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம் சினி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் டி.ரவிகுமார் தயாரிக்கும் படம் ‘நட்பதிகாரம் – 79’. இப்படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத் நடிக்கிறார். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்துள்ளார். இன்னொரு நாயனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத்கான் நடிக்கிறார். கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் கதை திரைக்கதி வசனம் எழுதி இயக்கும் ரவிச்சந்திரன் படம் குறித்து பேசும்போது, ‘‘ இந்த படம் நான் இயக்கிய ‘மஜ்னு’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘சந்தித்த வேளை’, ‘உற்சாகம்’ போன்ற படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. நட்பின் பெருமையை சொல்லும் படம் இது. இந்தப் படத்திற்காக இசை அமைப்பாளர் தேவா ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் காட்சியில் ராஜுசுந்தரம் மற்றும் கதாநாயகர்களான ராஜ்பரத், அம்ஜத் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ஆகியோர் ஆடிப்பாடிய காட்சிகள் படமாக்கப்பட்டது. இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களை குஷிப்படுத்தும் படமாக இது இருக்கும். விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது’’ என்றார் இயக்குனர் ரவிச்சந்திரன். இந்த படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தீபக் நிலம்பூர் இசை அமைத்திருக்கிறார்.

Key News
Director Ravichandran who already directed Majnu is making his next movie title Natpathigaram 79. Music director Deva has sung a song in this movie and Rajusundaram has danced for this song.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செஞ்சிட்டாலே என் காதல - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;