பெண்களுக்கான மராத்தான் போட்டியில் ராதிகா சரத்குமார்!

பெண்களுக்கான மராத்தான் போட்டியில் ராதிகா சரத்குமார்!

செய்திகள் 24-Feb-2015 10:52 AM IST VRC கருத்துக்கள்

வருகிற மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம்! இதனையொட்டி இந்தியாவில் முதன் முறையாக பெண்கள் மராத்தான் போட்டி ஒரே நேரத்தில் 3 நகரங்களில் நடைபெறுகிறது. மகளிர் மாண்பை போற்றும் விதமாக இந்த மாரத்தான் போட்டிக்கு ‘சீக்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. பல சமூக சேவகளை செய்து வரும் இந்த அமைப்பின் தலைவர் சேவியர் பிரிட்டோ! அவர் இந்த மராத்தான் போட்டி குறித்து பத்திரிகையாளர்களிடையே பேசும்போது,

‘‘நம் வாழ்வில் ஏதேனும் ஒரு கணத்தில் ஏதோ ஒரு பெண்ணுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால் அதற்கான தருணம் கிடைக்காமல் போய் இருக்கக் கூடும். அப்படிப்பட்ட ஒரு அற்புத தருணத்தை ஆண்களுக்கு ஏற்படுத்தி தருகிறது மகளிர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் பெண்களுக்கான இந்த மராத்தான் போட்டி! இந்த போட்டி இந்தியாவில் ஒரே நேரத்தில் சென்னை, பெங்களூரு, ஹைதராபத் என 3 நகரங்களில் மார்ச் 8-ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவிருக்கிறது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ராணிமேரி கல்லூரியில் ஆரம்பிக்கும் இந்த மராத்தான் ஓட்ட பந்தயம், அண்ணா சதுக்கம் வரை சென்று மீண்டும் ராணி மேரிக் கல்லூரி வந்து நிறைவடையும். ஒட்டுமொத்த பந்தய தூரம் 6 கிலோமீட்டர் ஆகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல சைக்கிள் பந்தய வீரரும், ஓட்டப் பந்தய வீரருமான நெவில் பிலிமோரியா பங்கேற்க உள்ளார். அத்துடன் சரத்குமார், ராதிகா சரத்குமார் உட்பட பல சினிமா கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்’’ என்றார் சேவியர் பிரிட்டோ!

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சரத்குமாரும், அவரது மனைவி திருமதி ராதிகா சரத்குமாரும் கலந்துகொண்டு மரத்தான் போட்டி சம்பந்தமான தகவல்களை தெரிவிக்க இருந்தனர். ஆனால் ராதிகா சரத்குமாருக்கு ஏற்பட்ட திடீர் உடல் நல குறைவால், அவர்களால் இந்நிகழ்ச்சியைல் கலந்து கொள்ள முடியவில்லை!

Key News
For the first time in India, the marathon is being held exclusively for women on March 8th. The highlight in this event is, the marathon is happen on 3 cities at the same time (Chennai, Bangalore, Hydrabad). Radika Sarathkumar will be felicitating the marathon.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 2 சிங்கப்பூர் - டிரைலர்


;