‘காக்கி சட்டை’யுடன் எட்டுத்திக்கிலும் மோதும் மதயானை!

‘காக்கி சட்டை’யுடன் எட்டுத்திக்கிலும் மோதும் மதயானை!

செய்திகள் 24-Feb-2015 9:34 AM IST Chandru கருத்துக்கள்

‘மான் கராத்தே’ படத்திற்குப் பிறகு ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் படம் சிவகார்த்திகேயனின் ‘காக்கி சட்டை’. எதிர்நீச்சல் இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருக்கிறார். வழக்கம்போல் அனிருத்தின் இசையமைப்பில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் வரும் 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

அதே நாளில் ‘ராட்டினம்’ இயக்குனர் கே.எஸ்.தங்கசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எட்டுத்திக்கும் மதயானை’ படமும் ரிலீஸாகிறது. ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கே.எஸ்.தங்கசாமி, ‘ராட்டினம்’ லகுபரன், சாம் ஆன்டர்சன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ‘காக்கி சட்டை’யுடன் களமிறங்கும் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்திற்கு எவ்வளவு தியேட்டர்கள் கிடைக்கும் என்பது தெரியவில்லை. இப்படத்தின் ரிசல்ட் பாசிட்டிவாக இருக்கும் பட்சத்தில் ‘காக்கி சட்டை’க்கு சரியான போட்டியாக இருக்கும் என சினிமா ஆர்வலர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

Key News
Raatinam director's Ettuthikkum Mathayaanai is getting released alongside KakkiSattai.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;