‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் இருக்கிறார் சிம்ரன்!

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் இருக்கிறார் சிம்ரன்!

செய்திகள் 24-Feb-2015 9:06 AM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’, ‘பென்சில்’ படங்களைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் இன்னொரு படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் ‘விடிவி’ கணேஷும் நடிக்கிறார். கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவரும் ஜி.வி.யேதான்.

பரபரப்பாக ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தில் நடிகை சிம்ரனும் இணைந்திருக்கிறார். அவருடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேரக்டருக்காக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ‘ஸ்லிம்ரனா’க காட்சியளிக்கவிருக்கிறாராம். கடைசியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் சிம்ரன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Key News :
Simran to Play a important role in G.V.Prakash Kumar's Trisha Illana Nayanthara movie. Heroine Kayal fame Anandhi, movie directed by Adhik Ravichandran, produced by C.J.Jayakumar under the banner of Cameo Films India. Music by G.V.Prakash.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;