கமல், ரஜினி, விஜயகாந்த் படங்களை இயக்கிய ஆர்.சி.சக்தி மறைவு!

கமல், ரஜினி, விஜயகாந்த் படங்களை இயக்கிய ஆர்.சி.சக்தி மறைவு!

செய்திகள் 23-Feb-2015 5:11 PM IST Chandru கருத்துக்கள்

1976ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கிய ஆர்.சி.சக்தி இன்று பிற்பகல் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாராம். ஆனால், சிகிச்சை எதுவும் பலனளிக்காததால் அவர் மரணமடைந்துவிட்டதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

1979ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘தர்மயுத்தம்’, 1986ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘மனக்கணக்கு’ போன்ற படங்களையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார். மேலும் மனிதரில் இத்தனை நிறங்களா, கூட்டுப்புழு, அம்மா பிள்ளை போன்ற படங்களையும் இவர் இயக்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசனுடன் ஆர்.சி.சக்திக்கு மிகவும் நெருங்கிய நட்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அன்னாரின் மறைவுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.

KeyNews :
Film-maker R.C. Sakthi passes away. Sakthi launched Kamal Haasan as a lead actor in Unarchigal, before also working with Rajinikanth in Dharma Yuddham and Vijayakanth in Manakanakku.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;