ஆர்யா, பரத், அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இணையும் ‘சைஸ் ஜீரோ’!

ஆர்யா, பரத், அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இணையும் ‘சைஸ் ஜீரோ’!

செய்திகள் 23-Feb-2015 4:44 PM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் வெளிவந்த ‘லிங்கா’, ‘என்னை அறிந்தால்’ படங்களுக்குப் பிறகு வேறு தமிழ்ப் படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார் நடிகை அனுஷ்கா. தற்போது தெலுங்கில் பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ‘சைஸ் ஜீரோ’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நடிகை அனுஷ்கா. ராகவேந்திர ராவின் மகன் பிரகாஷ் கேவேலமுடி இயக்கும் இப்படத்தை பிவிபி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னன் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆர்யா, பரத், ஊர்வசி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நடிகை ஸ்ருதிஹாசனும் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

Key News:
Anushka's next movie SIZE ZERO has launched today. Its a bilingual film, Telugu and Tamil, directed by K Raghavendra Rao garu's son Prakash Kovelamudi. PVP garu is the producer and MM Keeravaani garu is composing the music and Nirav Sha handling the Camera. Arya, Bharath and Urvasi are also in main cast and Shruthi Haasan in a star guest appearance.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;