‘புலி’யை வாங்கிய சோனி!

‘புலி’யை வாங்கிய சோனி!

செய்திகள் 23-Feb-2015 3:53 PM IST VRC கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் வியாபாரம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளும் இப்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல சோனி நிறுவனம் கைபற்றியுள்ளது. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்யுடன் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ‘நான் ஈ’ புகழ் சுதீப், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;