‘உத்தம வில்லன்’ டெக்னீஷியனுக்கு ஆஸ்கார் விருது!

‘உத்தம வில்லன்’ டெக்னீஷியனுக்கு ஆஸ்கார் விருது!

செய்திகள் 23-Feb-2015 12:40 PM IST VRC கருத்துக்கள்

இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து முடிந்துள்ளது. இவ்விழாவில் சிறந்த சவுன்ட் மிக்சிங் கலைஞருக்கான விருது ‘WHIPLASH’ என்ற படத்தில் பணிபுரிந்த கிரேக்மேன் (CRAIGMAAN) பெற்றுள்ளார். இப்படத்தில் கிரேக்மேனுடன் இணைந்து BEN WILKINS, THOMAS CURLEY ஆகியோரும் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சவுன்ட் மிக்சிங் டெக்னீஷியனுக்கான ஆஸ்கார் விருது பெற்றுள்ள கிரேக்மேன் தான் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்திலும் சவுன்ட் மிக்சிங் வேலைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ஏப்ரல் 2-ஆம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;