ஏப்ரல் ரிலீசுக்கு தயாராகும் ‘முனி-3’

ஏப்ரல் ரிலீசுக்கு தயாராகும் ‘முனி-3’

செய்திகள் 23-Feb-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அம்பத்தூர் திருமுல்லைவாயல் அருகே மிக பிரம்மாண்டமான முறையில் கட்டியிருக்கும் ராகவேந்திரர் கோயில் மிகப் பிரபலமாகி இருக்கிறது. மகான் ராகவேந்திரர் பிறந்த நாளான ஃபிப்ரவரி 25-ஆம் தேதியை தனது கோயிலில் மிக பிரம்மாண்டமாக கொண்டாட திடமிட்டிருக்கிறார் ராகவா லாரன்ஸ்.

காலை முதல் நள்ளிரவு வரை ஏராளமான நிகழ்சிகள் நடக்க உள்ளது. ராகவேந்திரர் திருவீதி உலாவும் ஏற்பாடு செயப்பட்டுள்ளது. சென்ற வருடம் மூவாயிரம் பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்த வருடம் சுமார் ஐயாயிரம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. மதியம் சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கனும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ராகவா லாரன்ஸ் தான் இயக்கியுள்ள ‘முனி- 3’ படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இப்படத்தை ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;