உழைப்பாளர் தினத்தில் ‘மாஸ்’ காட்டுகிறார் சூர்யா!

உழைப்பாளர் தினத்தில் ‘மாஸ்’ காட்டுகிறார் சூர்யா!

செய்திகள் 23-Feb-2015 10:29 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படம் ரசிக்ரகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கார்த்தி நடித்த ‘பிரியாணி’ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஃபான்டசி த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘மாஸ்’ படத்தை தொழிலாளர்கள் தினமன மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா, ஜெயராம், சமுத்திரகனி, பார்த்திபன், கருணாஸ், பிரேம்ஜி அமரன், சஞ்சய் பாரதி முதலானொர் நடித்து வருகிறார்கள். ‘ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித்தை வைத்து ‘மங்காத்தா’ எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுவின் ‘மாஸ்’ அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ரிலீஸாவது ரசிகர்களிடையெ பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!

Key News :
Suriya’s Masss hitting screens on Ajith’s birthday (May 1). Directed by Venkat Prabhu. Music by Yuvan Shankar Raja. Produced by Studio Green. Distributed by Eros International.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;