‘16 வயதினிலே’ தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படம்!

‘16 வயதினிலே’ தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படம்!

செய்திகள் 21-Feb-2015 5:53 PM IST VRC கருத்துக்கள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி முதலானோர் நடித்து, பாரதிராஜா இயக்கிய படம் ‘16 வயதினிலே’. இப்படம் உட்பட பல படங்களை தயாரித்தவர் ராஜ்கண்ணு. இவரது மகன் மிதுன் குமார் ‘களத்தூர் கிராமம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக றிமுகமாகிறார். ‘தடையற தாக்க’ படத்தில் இயக்குனர் மகிழ் திருமேனியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் மிதுன் குமார். ‘களத்தூர் கிராமம்’ படத்தை அறிமுகம் சரண்.கே அத்வைதன் இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இது இளையராஜா இசை அமைக்கும் 1001-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், கன்னடம் என இரண்டு மொழியில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இப்படத்தை ‘ஏ.ஆர்.மூவி பாரடைஸ்’ நிறுவனம் சார்பில் சீனுராஜ் தயாரிக்க, அவருடன் இணை தயாரிப்பாளராக மிதுன் குமாரின் தந்தை ராஜ்கண்ணுவும் பொறுப்பேற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;