ரிலீசில் சாதனை படைக்கும் ‘காக்கி சட்டை’

ரிலீசில் சாதனை படைக்கும் ‘காக்கி சட்டை’

செய்திகள் 21-Feb-2015 4:22 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘காக்கி சட்டை’ படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசாகிறது. தனுஷின் ‘வுண்டபார்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் உலகம் முழுக்க வெளியிடுகிறார். சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை தயாரித்து வெளியிட்ட இந்நிறுவனம் தான் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தையும் வெளியிட்டது. இந்த படங்களை தொடர்ந்து ‘காக்கி சட்டை’ படத்தையும் பெரிய அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் மதன். தமிழகத்தில் மட்டும் 370 தியேட்டர்களுக்கும் மேலான தியேட்டர்களில் ‘காக்கி சட்டை’யை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள மதன் அடுத்த நாட்களில் தியேட்டர் எண்ணிக்கை இதைவிட கூடவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக தியேட்டர்களில் வெளியாகும் படம் ‘காக்கி சட்டை’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;