சண்டமாருதம் - விமர்சனம்

சூறாவளி புயல்

விமர்சனம் 21-Feb-2015 3:33 PM IST Top 10 கருத்துக்கள்

Production : Magic Frames
Directed by : A.Venkatesh
Starring : Sarath Kumar, Radha Ravi, Samuthirakani, Oviya, Meeranandhan, Thambi Ramayya.
Music : James Vasanthan
Cinematography : N.S.Udhayakumar
Editing : V.T.Vijayan

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சரத்குமார் ஹீரோ - வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம். இப்படம் அவருடைய முந்தைய இரட்டை வேட படங்களை விட சிறப்பாக அமைந்திருக்கிறதா?

கதைக்களம்

கும்பகோணத்தையே தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு செயல்படும் மிக பெரிய தாதா சர்வேஸ்வரன் (சரத்குமார்). சர்வதேச கிரிமினல்களுடனும் தொடர்புடைய சர்வேஸ்வரன் ‘ஒஃபாலிஸ்கா’ எனும் கெமிக்கல் கலவையை வைத்துக்கொண்டு எதிரிகளை வித்தியாசமாக கொலை செய்து எந்த தடையமும் இல்லாத மாதிரி செய்துவிடுபவர். போலீஸ் அதிகாரி உட்பட பலரை கொன்று குவித்த சர்வேஸ்வரனை போட்டுததள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி சூர்யா (சரத்குமார்) ரகசியமாக கும்பகோணம் வருகிறார். சர்வேஸ்வரனின் கோட்டைக்குள் புகுந்து சூர்யா அவனை எப்படி அழிக்கிறார் என்பது தான் ‘சண்டமாருதம்’ படத்தின் ஒரு வரி கதை.

படம் பற்றிய அலசல்

வழக்கமான போலீஸ் - தாதா கதை தான்! முதல் பாதி குடும்பம், சென்டிமென்ட், கலகலப்பு என ஸ்லோவாக பயணிக்கும் கதை இடைவேளைக்கு பிறகு அதிரடி, ஆக்‌ஷன், விறுவிறுப்பு என்று செல்ல, அதனை தனது வழக்கமான பாணியில் இயக்கியிருக்கிறார் ஏ.வெங்கடேஷ்! சர்வேஸ்வரன் தாதா ஆனதற்கான காரணத்தை ஃப்ளாஷ்பேக் காட்சியில் விளக்குவதிலிருது சூடு பிடிக்கிறது திரைக்கதை. தாதா சர்வேஸ்வரனின் வீட்டுக்குள் தண்ணீர் கேன் போடும் தொழிலாளியாக நுழையும் சூர்யா, அவனது ரகசியங்களை கண்டறிவதும், அவனை தீர்த்துக்கட்ட வகுக்கும் ஒவ்வொரு வியூகங்களும் படம் பார்ப்போருக்கு த்ரில்லிங்கை ஏற்படுத்தும் விதமாக விறுவிறுப்பாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்! சூர்யா, தன்னை தீர்த்துக்கட்ட வந்த போலீஸ் அதிகாரி என்று சர்வேஸ்வரனுக்கு தெரிந்ததும், அவன் எடுக்கும் விஸ்வரூபம், சர்வேஸ்வரனை அடக்க சூர்யா எதிர்கொள்ளும் போராட்டங்கள்... என இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. அதற்கு உதயகுமாரின் ஒளிப்பதிவும், வி.டி.விஜயனின் படத்தொகுப்பும் மிகவும் கை கொடுத்துள்ளன. இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாடல்களில் கவனம் செலுத்தியதை போல பின்னணி இசையில் அவ்வளவு கவனம் செலுத்தவில்லை போலும்! ஒரு அதிரடி ஆக்‌ஷன் படத்திற்கான பின்னணி இசை படத்தில் மிஸ்ஸிங்!

நடிகர்களின் பங்களிப்பு

சர்வேஸ்வரன், சூர்யா என இரண்டு வேடங்களிலும் சரத்குமார் தனது பாணியில் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். போலீஸ் அதிகாரி சூர்யாவாக வரும் சரத்குமாரை விட, வில்லன் சர்வேஸ்வரன் நடிப்பில் சரத்குமார் ஸ்கோர் செய்திருக்கிறார். சர்வேஸ்வரனின் அந்த நடை, உடை, பாவனை, கம்பீரம்... திகிலடைய செய்யும் ஒரு கம்பீர தாதாவை அப்படியே நம் கண் முன் கொண்டு வந்துள்ளார்! கிளைமேக்ஸ் காட்சியில் இரண்டு சரத்குமாரும் மோதும் சண்டை காட்சிகள் சரத் ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்துள்ளது. முறை பெண்ணாக வரும் மீரா நந்தன் குடும்ப குத்து விளக்கு என்றால் சூர்யாவுக்கு உதவி புரியும் போலீஸ் அதிகாரியாக வரும் ஓவியா இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் கிளாமர் குயின்! சர்வேஸ்வரனால் கொடூரமாக கொலை செய்யப்படும் போலீஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி, சர்வேஸ்வரனின் வலதுகரம் போல் செயல்படும் தாதாவாக ராதாரவி, சூர்யா-சரத்குமாரின் மாமாவாக வரும் தம்பி ராமையா மற்றும் ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி, சிங்கம் புலி, டெல்லி கணேஷ் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் தங்களது பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

பலம்

1. விறுவிறுப்பான இரண்டாம் பாதி திரைக்கதை.
2.மாறுபட்ட இரண்டு வேடங்களிலும் சரத்குமாரின் அர்ப்பணிப்பு
3.விறுவிறு படத்திற்கேற்ற எடிட்டிங்கும், ஒளிப்பதிவும்

பலவீனம்

1.இடைவேளை வரை ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை
2.விறுவிறு காட்சிகளுக்கு பொருந்தாத பின்னணி இசை

மொத்தத்தில்

சரத்குமார் இது வரை நடித்த இரட்டை வேட படங்களை இப்படத்துடன் ஒப்பிடாமல், அவரது மாறுபட்ட ஆக்‌ஷன், அதிரடி நடிப்புக்காக இப்படத்தை பார்க்கலாம்!

ஒருவரி பஞ்ச் : சூறாவளி புயல்

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;