இயக்குனர் ஆகிறார் எடிட்டர் ஆன்டனி!

இயக்குனர் ஆகிறார் எடிட்டர் ஆன்டனி!

செய்திகள் 21-Feb-2015 12:34 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஷட்டர்’ திரைபப்டம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தை இயக்குனர் விஜய் தயாரிக்கிறார். மலையாளத்தில் லால் நடித்த கேரக்டரில் தமிழில் சத்யராஜ் நடிக்கிறார். மலையாளத்தில் சஜிதா மடத்தில் நடித்த கேரக்டரை தமிழில் மலையாள நடிகை அனுமோல் செய்கிறார். இயக்குனர் விஜய் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல எடிட்டர் ஆன்டனி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50 படங்களுக்கும் மேல் எடிட்டிட்டராக பணிபுரிந்த ஆன்டனி இயக்கும் முதல் படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

‘ஷட்டர்’ தமிழில் ரீ-மேக் ஆவதோடு மராத்தி மொழியிலும் ரீ-மேக் ஆகிறது. வி.கே.பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் சச்சின் கேதேகர், சோனாலி குல்கர்னி, பிரகாஷ் பாரா முதலானோர் நடிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - GST பாடல் வீடியோ


;