பத்திரிகையாளர் ஆகிறார் ‘தெகிடி’ ஹீரோயின் ஜனனி ஐயர்!

பத்திரிகையாளர் ஆகிறார் ‘தெகிடி’ ஹீரோயின் ஜனனி ஐயர்!

செய்திகள் 21-Feb-2015 12:24 PM IST Chandru கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் அஷோக் செல்வன், ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘தெகிடி’ படம் அனைத்துதரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்த த்ரில்லர் படத்தில் நடித்த ஹீரோயின் ஜனனி ஐயருக்கும் அவருடைய கேரியரில் முக்கிய படமாக அமைந்தது.

தற்போது ‘ம.சு.க.’ எனும் பெயரில் தமிழ், மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகும் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஜனனி ஐயர். ‘ம.சு.க’ என்றால் மஞ்சள், சுவப்பு (தமிழில் சிவப்பு, மலையாளத்தில் சுவப்பு), கருப்பு என்று அர்த்தமாம். அதே நேரம் பிரேசில் மொழியில் இதற்கு ‘மிகுந்த வலி’ என்றொரு அர்த்தமும் இருக்கிறதாம்.

இப்படத்தில் ஜனனி ஐயர் பத்திரிகையாளராக நடிக்கிறார். கதைப்படி ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான பிரதாப் போத்தனை பேட்டி எடுப்பதற்காக மூணாறு செல்கிறார் ஜனனி. அங்கே வக்கீலாக இருக்கும் பசுபதியை சந்திக்க, அதன் பிறகு நடக்கும் பரபர 12 மணி நேரங்களே படத்தின் கதைக்களமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் அந்த கருப்பு ஆடு - trailer


;