மறுபடப்பிடிப்பு நடத்தி ‘யு’ வாங்கிய படம்

மறுபடப்பிடிப்பு நடத்தி ‘யு’ வாங்கிய படம்

செய்திகள் 21-Feb-2015 11:37 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் ‘வஜ்ரம்’. ‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள இப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து சமீபத்தில் சென்சாருக்கு சென்றது. படத்தில் குழந்தைகளை வைத்து சர்ச்சைக்குரிய விதத்தில் சில காட்சிகளை எடுத்திருப்பதால் இப்படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டனர் சென்சார் குழுவினர்! ஆனால் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் தான் வேண்டும் என்பதற்காக ‘வஜ்ரம’ படக் குழுவினர், சில காட்சிகளை மறு படப்பிடிப்பு நடித்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இப்போது படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்! இதனை தொடர்ந்து இப்படத்தை வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுவாதி கொலை வழக்கு - trailer


;