சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ‘காக்கி சட்டை’!

சிவகார்த்திகேயனை கண்கலங்க வைத்த ‘காக்கி சட்டை’!

செய்திகள் 21-Feb-2015 11:18 AM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயனின் 7-ஆவது படமாக வருகிற 27-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது ‘காக்கி சட்டை’. ‘எதிர்நீச்சல்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் துரை செந்தில் குமாரும், சிவகார்த்திகேயனும் இணைந்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் சம்பந்தமான புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ்காரராக இருந்தவர். இதை வைத்து சிவகார்த்திகேயனிடம் இப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்தபோது எப்படி ஃபீல் பண்ணினீஙக? என்று கேட்டபோது,

‘‘உண்மையிலேயே இப்படத்திற்காக காக்கி சட்டையை போட்டதும் என் அப்பா ஞாபகம் வந்து என்னை ஃபில் பண்ண வச்சது. அப்பா நான் சாதாரண ஒரு போலீஸ் காரனாக வருவதை விட ஐ.பி.எஸ். படித்து பெரிய போலீஸ்காரனாக வரவேண்டும் என்று தான் ஆசைப்பட்டார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை. இப்படத்தில் நான் பொலீஸ்காரராக நடித்ததன் மூலம் ஒரு சிறிய மனதிருப்தி கிடைச்சிருக்கு! ‘காக்கி சட்டை’யில் என்னை பார்த்த என் அம்மாவுக்கும் அப்பாவுடைய நினைவுகள் வந்தது போலும்! ஆனால் அதை அவர் அதிகமாக வெளிகாட்டிக்கவில்லை’’ என்றவாறு கண்கலங்கினார் சிவகார்த்திகேயன்.

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘காக்கி சட்டை’யை ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன் உலகம் முழுக்க வெளியிடுகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யாவுடன் மனோபாலா, இமான் அண்ணாச்சி, மயில்சாமி ஆகியோரும் நடித்திருக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வருகிற 27-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது ‘காக்கி சட்டை’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;