மம்முட்டியை இயக்கும் ராம்!

மம்முட்டியை இயக்கும் ராம்!

செய்திகள் 21-Feb-2015 10:31 AM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘தரமணி’ என்ற படத்தை இயக்கி வரும் ராம் அடுத்து மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஏற்கெனவே பல தமிழ் படங்களில் நடித்துள்ள மம்முட்டி கடைசியாக நடித்த தமிழ் படம் ‘வந்தே மாதரம்’ இந்தப் படத்திற்கு பிறகு ராம் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் மம்முட்டி! ராம் மம்முட்டியிடம் சொன்ன ஒரு ஒன் லைன் ஸ்டோரி அவருக்கு மிகவும் பிடித்துள்ளதாம்! தற்போது ராம் இயக்கி வரும் ‘தரமணி’ படத்தின் வேலைகள் முடிந்ததும் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் முழு மூச்சாக இறங்க இருக்கிறாராம் ராம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மற்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லையாம்! மம்முட்டி தற்போது சித்திக் இயக்கத்தில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங்


;