புயலை கிளப்பும் சரத்குமாரின் ‘சண்டமாருதம்!

புயலை கிளப்பும் சரத்குமாரின் ‘சண்டமாருதம்!

செய்திகள் 20-Feb-2015 1:22 PM IST VRC கருத்துக்கள்

சரத்குமாரை வைத்து ‘மகாபிரபு’, ‘ஏய்’, ‘சாணக்யா’ ஆகிய அதிரடி ஆக்‌ஷன் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ், சரத்குமாரை வைத்து மீண்டும் இயக்கியுள்ள படம் ‘சண்டமாருதம்’. இதில் சரத்குமார் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 20 வருடங்களுக்கு பிறகு சரத்குமார் வில்லனாக நடித்துள்ள இப்படம் இன்று உலகம் முழுக்க கிட்டத்தட்ட 400 தியேட்டர்களில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக சில படங்களில் கேமியோ ரோல்களில் மட்டுமே நடித்து வந்த சரத்குமார் இதில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்திருப்பதோடு இப்படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார். இதனால் அவரது ரசிகர்களிடையே இப்படம் பெரும் ஏதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடியே இயக்குன் ஏ.வெங்கடேஷ் இப்படத்தை அதிரடி ஆக்‌ஷன் படமாக மட்டுமல்லாமல் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் ஃபேமிலி சென்டிமென்ட், காமெடி என ஜனரஞ்சக படமாக இயக்கியுள்ளார்.

இதுவரை சரத்குமார் நடித்த படங்களை போல் இல்லாமல் உலக அளவில் இப்படத்தின் வியாபாரமும் நடந்துள்ளது. அத்துடன் இதுவரை சரத்குமார் நடித்த எந்த படமும் ஒரே நாளில் உலகம் முழுக்க வெளியானதில்லை. அந்த வகையில் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ள ‘சண்டமாருதம்’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படமாக அமைந்துள்ளது என்றும், இதனால் இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படம் குறித்து சரத்குமார் கூறும்போது, ‘‘சண்டமாருதம்’ என்றால் புயலை தாண்டிய காற்று என்று அர்த்தம்! இந்தப் படத்தில் புயலை போன்ற ஒரு வில்லனை தென்றல் போன்ற ஒரு போலீஸ் அதிகாரி எப்படி தாக்குகிறார், வீழ்த்துகிறார் என்பது தான் படத்தின் கதை’’ என்றார்.
சரத்குமார் கூறியதை போலவே இப்படம் வசூலிலும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்ப்போம்! இப்படத்தை ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

Key News
Sarath Kumar starring Sandamaarutham is releasing today and the meaning of that name is "A Breeze by-passing a wind". A Venkatesh has directed the movie with Meera Nandan and Oviya shares the spaces for female lead.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;