சென்சார் குழு உறுப்பினர், தயாரிப்பாளர் ஆனார்!

சென்சார் குழு உறுப்பினர், தயாரிப்பாளர் ஆனார்!

செய்திகள் 20-Feb-2015 12:38 PM IST VRC கருத்துக்கள்

‘திருமாருதி பிக்சர்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் டி.பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘விரைவில் இசை’. ‘மாஸ்டர்’ மகேந்திரன் என்று அழைக்கப்பட்டு வரும் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக திலீப் நடித்துள்ளார். கதாநாயகியாக அபர்ணா நடித்துள்ளார். காலம் சென்ற நடிகர் ஜெய்சங்கரின் புதல்வர் சஞ்சய் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கிராமத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வரும் இளைஞர்கள் பற்றிய கதை இது என்பதால் இப்படத்திற்கு சினிமா சம்பந்தப்பட்ட தலைப்பாக ‘விரைவில் இசை’ என்று புதுமையாக தலைப்பை வைத்துள்ளனர்.
இப்படத்தை ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் உட்பட பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய வி.எஸ்.பிரபா இயக்கியிருக்கிறார். அறிமுக இசை அமைப்பாளர் எம்.எஸ்.ராம் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை கமலா தியேட்டரில் நடந்தது. சினிமா சம்பந்தப்பட்ட கதை என்பதாலோ என்னவோ இவ்விழாவிற்கு ‘அபிராமி’ ராமநாதன், கேயார், எஸ்.பி.முத்துராமன், பேரரசு பாண்டியராஜன், மயில் சாமி, பரத், அருண்குமார், சக்தி, ஒய்.ஜி.மகேந்திரன், அஷோக், ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ். இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் என ஏராளமான திரையுலக பிரபலங்கள் வந்திருந்து படக்குழுவினரை வாழ்த்தினர்.

இந்தப் படத்தை தயாரித்திருக்கும் டி.பாலகிருஷ்ணன் சென்சார் குழுவில் உறுப்பினாராக இருந்திருக்கிறார். தேசிய விருது பெற்ற ‘வழக்கு எண் 18/9’ உட்பட பல படங்களின் தணிக்கையில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளாராம். அப்போது சென்சாருக்கு வரும் படங்களை பார்த்து தான் இவருக்கு ‘ஏன் நாமும் படங்கள் தயாரிக்க கூடாது?’ என்ற எண்ணம் வந்ததாம்! அதன் விளைவாக தயாரித்த படமாம் ‘விரைவில் இசை’.

ஒரு சென்சார் குழு உறுப்பினர் தயாரித்திருக்கும் படம் இது என்பதால் குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படமாக இது இருக்கும் என்பதில் ஐய்யமில்லை என்று விழாவில் பேசிய நிறைய பேர் கருத்து தெரிவித்தனர்.

Key News

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - டைட்டில் வீடியோ


;