ஒரே நாளில் ‘ட்ரீம் ஃபேக்டரி’யின் 2 படங்கள்!

ஒரே நாளில் ‘ட்ரீம் ஃபேக்டரி’யின் 2 படங்கள்!

செய்திகள் 20-Feb-2015 10:32 AM IST VRC கருத்துக்கள்

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்” நிறுவனமும், அல்லு அரவிந்தின் ‘கீதா ஆர்ட்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்த ‘டார்லிங்’ படத்தை வெளியிட்ட ‘ட்ரீம் ஃபேக்டரி’ நிறுவனம், தனது அடுத்த வெளியீடாக சித்தர்த் நடித்துள்ள ‘எனக்குள் ஒருவன்’ படத்தை ரிலீஸ் செய்கிறது. ‘எனக்குள் ஒருவன்’ படத்தை ஏற்கெனவெ மார்ச்-6 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம், அதே நாளில் மற்றுமொரு படத்தையும் ரிலீஸ் செய்யவிருக்கிறது. அந்தப் படம் வினய் ஹீரோவாக நடித்துள்ள ‘சேர்ந்து போலாமா?’. நியூசிலாந்த் பின்னணியில் சொல்லப்படும் ரொமான்டிக் காதல் கதையாம் இப்படம். அனில் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் வினய்யுடன் மதுரிமா, ப்ரீத்தி முதலானோர் நடித்துள்ளனர். ‘லூசியா’ கன்னட படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியுள்ள ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் சித்தார்த்துடன் தீபா சன்னதி நடித்துள்ளார். பிரசாத் ராமர் இயக்கியுள்ளார். ஒரு நிறுவனம் ஒரே நாளில் 2 படங்களை ரிலீஸ் செய்வது கோலிவுட்டில் அரிதான விஷயம் என்பது குறிப்பிட்த்தக்கது.

Key News
Dream Factory is releasing Ennakul Oruvan and Sernthu Polama on the same day. Its is rare occasion to release 2 movies on the same day.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;