‘மிர்ச்சி’ சிவா, பாபி சிம்ஹா இணையும் ‘மசாலா படம்’

‘மிர்ச்சி’ சிவா, பாபி சிம்ஹா இணையும்  ‘மசாலா படம்’

செய்திகள் 20-Feb-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

‘ஆல் இன் பிக்சர்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ மசாலா படம்’. இப்படத்தில் ‘ மிர்ச்சி’ சிவா, ‘ பாபி’ சிம்ஹா, புதுமுகம் கௌரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே’ படத்தில் நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தை ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். புதுமுகம் கார்த்திக் ஆச்சார்யா இப்படதிற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார்.‘வெண்ணிலா கபடி குழு’, ‘ குள்ள நரி கூட்டம்’, ‘போடா போடி’, ‘ பாகன்’, ‘ தில்லு முல்லு’ என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார் இப்படத்தை தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.

இப்படம் குறித்து லட்சுமன் குமார் கூறும்போது, ‘‘என்னை பொறுத்தவரை ஒளியை பதிவு செய்வது மட்டும் வேலையில்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை கண்டும், கேட்டும், உணர்ந்தும் பதிவு செய்துக் கொள்வேன். அப்படி என்னுடைய திரை வாழ்வில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம் மசாலா படங்கள் குறித்த விவாதம், அதை ஒட்டி வரும் கருத்துக்கள்... இவற்றை வைத்து ஒரு திரைக்கதை அமைத்து படமாக்க விரும்பினேன். அதன் விளைவாக உருவாகியது தான் இந்த ‘மசாலா படம்’. இந்த கதைக்கு ‘மிர்ச்சி’ சிவாவும், ‘பாபி’ சிம்ஹாவும் பொருத்தமாக இருப்பார்கள் என்று அவர்களை நடிக்க வைத்திருக்கிறேன். இப்படத்தின் இசையும் மிகவும் பேசப்படும். பட்த்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட உள்ளோம்’’ என்றார்.

Key News
Poda Podi cinematographer turns Director with the movie titled Masala Padam. Mirchi Shiva and Bobby Shimha are doing the lead roles.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சாமி 2 ட்ரைலர்


;