மார்ச் முதல் மீண்டும் போலீஸ் யூனிஃபார்மில் விஷால்!

மார்ச் முதல் மீண்டும் போலீஸ் யூனிஃபார்மில் விஷால்!

செய்திகள் 20-Feb-2015 10:09 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆம்பள’ படத்தைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்கிறார் விஷால். ‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் மீண்டும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஷாலுக்கு வித்தியாசமான போலீஸ் வேடமாம். ஏற்கெனவே சத்யம், வெடி ஆகிய படங்களில் விஷால் போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கிறார். ‘வேலையில்லா பட்டதாரி’யின் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.

வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படவிருக்கும் இந்த ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது.

Key News
After Satyam and Vedi, Vishal is going to be portrayed as a cop in his next. This movie will be directed by Suseendaran and it will go on floors by march 1st week.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;