ஷாருக், கஜோல் காதல் முடிவுக்கு வந்தது!

ஷாருக், கஜோல் காதல் முடிவுக்கு வந்தது!

செய்திகள் 20-Feb-2015 9:52 AM IST VRC கருத்துக்கள்

மும்பை மராத்தா மந்திர் தியேட்டரில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த ஷாருக்கான் - கஜோல் காதல் நேற்றுடன் (19-2-15) முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த 1995-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகி பெரும் வசூல் குவித்த ஹிந்தி படம் ‘தில்வாலே துல் ஹனியே லே ஜாயேங்கே’. ஷாருக்கான், கஜோல் ஜோடியாக நடித்து, ஆதித்யா சோப்ரா இயக்கிய இந்த காதல் காவியம் மராத்தா மந்திர் தியேட்டரில் வெளியாகிய நாளிலிருந்து (20, டிசம்பர், 1995) நேற்றுவரை (19-2-15) அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஓடிக்கொண்டுள்ளது. இந்திய சினிமா சரித்திரத்தில் இவ்வளவு காலம் எந்த திரைப்படமும் ஓடி சாதனை படைத்ததில்லை. அந்த சாதனையை நிகழ்த்திய இப்படம் 1000 வாரங்கள் தொடர்ந்து ஓடியதையொட்டி கடந்த ஆண்டு இந்த தியேட்டரில் விழா எடுத்து கொண்டாடினர்! அதனை தொடர்ந்து காலை 11.30 மணி காட்சியாக காட்டப்பட்டு வந்த இப்படம், பிறகு காலை 9.30 மணி காட்சியாக மாற்றப்பட்டது. இதனால் அந்த தியேட்டர்கள் ஊழியர்கள் அதிகபடியான நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதால், அந்த தியேட்டர் நிர்வாகத்தினரும், படத்தின் உரிமையாளர்களும் சேர்ந்து படத்தை நிறுத்துவதாக முடிவு எடுத்து அதன் படி நேற்றைய காட்சியுடன் ‘தில்வாலே துல் ஹனியே லே ஜாயேங்கே’ படத்தை அந்த தியேட்டரில் இருந்து எடுத்து விட்டுள்ளனர்!

Key News
After about 100 weeks "Dilwale Dulhaniya le Jayenge" came to an end. Its was running till yesterday from the date of its release in a theater named Maratha Mandir. Yesterday after completing 100 weeks, the movie's show has been cancelled after about 20years.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஐபி 2 - புதிய டீஸர்


;