விஜய்யின் 3 அவதாரம்... ‘புலி’ கெட்அப் ரகசியங்கள்!

விஜய்யின் 3 அவதாரம்... ‘புலி’ கெட்அப் ரகசியங்கள்!

செய்திகள் 20-Feb-2015 8:56 AM IST Chandru கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருட தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படத்தில் ஜீவானந்தம், கதிரேசன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ‘இளையதளபதி’ விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ படத்திற்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக இரட்டை வேடம் போட்டது இப்படத்தில்தான். அதேபோல் இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புலி’ படத்தில் முதல்முறையாக 3 வேடம் போட்டு அசத்தி வருகிறாராம் விஜய். இந்த செய்தியை ‘புலி’ படக்குழுவிலிருக்கும் நம்பத்தகுந்த நபர் ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.

இந்த 3 வேடங்களுமே ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளதாம். மன்னர் யுகம், டெக்னாலஜி யுகம் என இரண்டு காலகட்டங்களில் நடக்கும் ‘புலி’ படத்தில் ஒரு விஜய் குள்ள மனிதராகவும், இன்னொரு விஜய் ஓவியராகவும், மூன்றாவது விஜய் மாடர்ன் யூத்தாகவும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்கள். ஆனால் மூன்றாவது விஜய்க்கு ஜோடி இருப்பதாகத் தெரியவில்லை.

சமீபத்தில் ஈசிஆரில் படமாக்கப்பட்ட பாடல் காட்சி ஒன்றில் காமெடி நடிகை வித்யூலேகா ராமன் விஜய்யுடன் ஆடி அசத்தினார். தற்போது கேரளாவில் உள்ள மியூசியம் ஒன்றில் டெக்னாலஜி யுகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். விஜய்யும், ஸ்ருதிஹாசனும் இதில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வரும் ஜூலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Key News
Vijay's triple role in Puli being directed by Chimbu Devan. Hansika, Shruthi Hassan, Sridevi, Sudeep are playing the other four leads in the movie. Vijay is now all set to shoot inside a museum in Kerala.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;