மோகன்லாலுடன் இணையும் ஆன்ட்ரியா!

மோகன்லாலுடன் இணையும் ஆன்ட்ரியா!

செய்திகள் 19-Feb-2015 12:47 PM IST VRC கருத்துக்கள்

ஃபஹத் ஃபாசிலுடன் ‘அன்னயும் ரசூலும்’, பிருத்திவி ராஜுடன் ‘லண்டன் பிரிட்ஜ்’, மம்முட்டியுடன் ‘ஃபையர் மேன்’ ஆகிய மலையாள படங்களில் நடித்த ஆன்ட்ரியா, அடுத்து மோகன்லாலுடனும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார். மலையாளத்தின் பிரபல திரைக்கதை ஆசிரியரும், இயக்குனருமான ரஞ்சித் அடுத்து இயக்கும் படம் ‘லோஹம்’. இப்படத்தில் தான் மோகன்லாலுக்கு ஜோடியாகிறார் ஆன்ட்ரியா! இவர்களுடன் அஜ்மலும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கொச்சின், கோழிக்கோடு, துபாய் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது. மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘திருசியம்’ படத்தை தயாரித்த ‘ஆசீர்வாத் சினிமாஸ்’ என்ற நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. மம்முட்டியுடன் ஆன்ட்ரியா நடித்துள்ள ‘ஃபையர் மேன்’ திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. ஆன்ட்ரியா வசம் இப்போது ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘வலியவன்’,‘தரமணி’ ஆகிய தமிழ் படங்கள் இருக்கின்றன!

Key News
Andrea has already done as the lead role alongside Fazil, Prithvi and Mamooty. Now she has joined Mohanlal for the movie Logam which is directed by Ranjith.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;