ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சனா!

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சஞ்சனா!

செய்திகள் 19-Feb-2015 12:47 PM IST VRC கருத்துக்கள்

‘ரேனிகுண்டா’, ‘மீகாமன்; உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங். அவருக்கு வருகிற 23-ஆ தேதி பிறந்த நாள்! அன்றைய தினம் தன் குடும்ப உறுப்பினர்களுடன் கோவாவில் தனது பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார் சஞ்சனா சிங்! இதற்கு முன்னதாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற விரும்பிய சஞ்சனா சிங், இன்று காலை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் கேக்கை வெட்டி பத்திரிகையாளர்களின் வாழ்த்துக்களை பெற்றார். இதனை தொடர்ந்து சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள லிட்டில் ஃப்ளவர் ஆதரவற்றோர் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி மகிழ்ந்தார். ‘மீகாமன்’ படத்தை தொடர்ந்து இரண்டு தமிழ் படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறிய சஞ்சனா சிங், இப்போது ‘தொடா இஷ்’ என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறாராம்!

Key News
Actress Sanjana who acted in Renigunda, Anjaan, Meghamann celebrated her birthday today at the little flower orphan home with unprivileged children.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;