‘ஆரம்பம்’ ராணாவுடன் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீதிவ்யா!

‘ஆரம்பம்’ ராணாவுடன் சிங்கப்பூர் செல்லும் ஸ்ரீதிவ்யா!

செய்திகள் 19-Feb-2015 11:39 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தில் அஜித்துடன் நடித்த தெலுங்கு நடிகர் ராணா, மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார். மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில், நஸ்ரியா நடித்த கேரக்டர்களில் சித்தார்த், சமந்தா நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் இப்படத்திலிருந்து தற்போது விலகிவிட்டதால், ஃபஹத்தின் கேரக்டரில் நடிக்க ராணா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கவிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

‘பெங்களூர் டேஸ்’ மலையாள படத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் ஆர்யாவும், நிவின் பாலி நடித்த கேரக்டரில் சிம்ஹாவும் நடிக்கிறார்களாம். பொம்மரிலு பாஸ்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பமாகிறது. பெங்களூருவுக்குப் பதில் இந்த ரீமேக் படத்தில் சிங்கப்பூரை களமாக்கியிருப்பதால், 2ம் கட்ட படப்பிடிப்பை சிங்கப்பூரில் நடத்தவிருக்கிறார்களாம். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைக்கிறார்.

Key News
Malayalam movie Bangalore Days is being remade in Tamil and Telugu. Sri Divya reprises Nazriya's and Rana Dagupatti reprises Fahad Fazil's role. Bangalore days had its base in Bangalore while in remake, the story will happen in Singapore.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;