அஜித்தின் பிரபல வசனத்தில் நடிக்கும் அர்ஜுன்!

அஜித்தின் பிரபல வசனத்தில் நடிக்கும் அர்ஜுன்!

செய்திகள் 19-Feb-2015 11:33 AM IST Chandru கருத்துக்கள்

‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த அர்ஜுன் அவரின் நெருங்கிய நண்பராகவே மாறினார். தற்போது அஜித் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பெற்ற பிரபல வசனம் ஒன்று அர்ஜுன் நடிக்கும் படத்தின் தலைப்பாகியிருக்கிறது. ‘‘ஒரு மெல்லிசான கோடு.... கோட்டுக்கு அந்த பக்கம் நான் நல்லவன்... இந்த பக்கம் நான் ரொம்ப கெட்டவன்...’’ என்ற வசனம் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீஸரில் இடம்பெற்று ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது.

ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி தயாரிக்கும் படம் ஒன்றிற்கு ‘ஒரு மெல்லிய கோடு’ என்று பெயர் வைத்துள்ளார்கள். இப்படத்தில் அர்ஜுன், ஷாம் இணைந்து நடிக்கிறார்கள். இவர்கள் இருவக்குமிடையே நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் மையக்கருவாம். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக அக்‌ஷாபட் நடிக்க், ஒரு முக்கிய கேரக்டரில் அர்ஜுனுடன் ‘முதல்வன்’ படத்தில் நடித்த மனிஷா கொய்ராலாவும் நடிக்கிறார். இவர்கள் தவிர ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு சேதுஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டங் பொறுப்பை கே.வி.கிருஷ்ணமூர்த்தி ஏற்றிருக்கிறார்.

Key News
Ajith's latest blockbuster Yennai Arindhaal had a dialogue stating "Oru Mellisana Kodu". Now Arjun who acted alongside Ajith in Mankatha is using this dialogue for his next movie as the title, "Oru Melliya Kodu". Shaam acts with Arjun in this movie.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;