‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ இயக்குனர் படத்தில் திலீப்!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ இயக்குனர் படத்தில் திலீப்!

செய்திகள் 19-Feb-2015 9:53 AM IST VRC கருத்துக்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ வெற்றி படத்தை இயக்கிய மணிகண்டன் அடுத்து இயக்கும் படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திலீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே விஜயகாந்த் நடித்த ‘ராஜ்ஜியம்’ படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்திருக்கிறார். 2002-ல் வெளியான இப்படத்தை தொடர்ந்து 13 வருடங்கள் கழித்து திலீப் நடிக்கும் தமிழ் படம் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தைப் போல இப்படமும் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படமாம்! இப்போது அதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் பிசியாக இருக்கிறார் மணிகண்டன்! நடிகர் திலீபுக்கும் காமெடி கைவந்த கலைதான்! மலையாளத்தில் நிறைய காமெடி படங்களை வழங்கியவர் திலீப் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டு மலையாள படங்களில் நடித்து வரும் திலீப் அந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் மணிகண்டன் இயக்கும் தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். இது தவிர சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறை வைத்து தெலுங்கின் பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்கும் பிரம்மாண்ட படமான ‘பாபா சத்ய சாய்’ என்ற படத்திலும் நடிக்கிறார் திலீப்!

Key News
Manikandan who directed Kanna Laddu Thinna Aasaiya is now directing a movie in malayalam. Actor Dileep who acted as a brother to Vijayakanth in the movie Rajjiyam will be doing the lead role in this movie. This movie is also a comedy entertainer.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர் 2


;