சூர்யாவின் ‘மாஸ்’ ஈராஸ் வசம்!

சூர்யாவின் ‘மாஸ்’ ஈராஸ் வசம்!

செய்திகள் 18-Feb-2015 5:22 PM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வர, இப்படத்தின் வியாபார விஷயங்களும் சூடு பிடித்துள்ளது. இப்போது கிடைத்த தகவலின் படி ‘மாஸ்’ படத்தின் உலகாளவிய விநியோக உரிமையை பிரபல ‘ஈராஸ்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான ‘மாற்றான்’ படத்தை ஈராஸ் நிறுவனம் தான் உலகம் முழுக்க விநியோகம் செய்தது. ‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா ஜோடியாக நடிக்க, இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ,ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘மாஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;