பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மரணம்!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மரணம்!

செய்திகள் 18-Feb-2015 4:15 PM IST VRC கருத்துக்கள்

தெலுங்கு சினிமாவின் பழம் பெரும் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகர் வெங்கடேஷின் தந்தையுமான டி.ராமாநாயுடு ஹைதராபாத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 78. அவர் கடந்த சில மாதங்களாக புற்றுநோய் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்தார் என்று கூறப்படுகிறது. 1964-ஆம் ஆண்டு என்.டி.ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ என்ற படத்தை தயாரித்து சினிமாவில் தயாரிப்பாளரராக களமிறங்கிய ராமாநாயுடு இதுவரை 14 மொழிகளிலாக 150 படங்களுக்கும் மேல் தயாரித்து இந்திய சினிமா சரித்திரத்தில் பெரும் ஒரு சாதனையாளராக விளங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒரு சில படங்களை இயக்கவும், சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார் ராமநாயுடு! ஹைதராபாத்தில் இயங்கி வரும் மிகப் பெரிய ஸ்டுடியோவான ‘ராமநாயுடு ஸ்டுடியோ’வை நிறுவியவரும் இவரே! இவரது இழப்பு தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமல்ல, மொத்த இந்திய சினிமாவுக்கே பெரும் இழப்பாகும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;